12,May 2024 (Sun)
  
CH
இந்திய செய்தி

பிரதமர் நிவாரண நிதிக்கும், சீன ஆக்கிரமிப்பிற்கும் என்ன சம்பந்தம் இருக்கு என நிதியமைச்சர் பா.சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்

பிரதமர் நிவாரண நிதிக்கும், சீன ஆக்கிரமிப்பிற்கும் என்ன சம்பந்தம் என முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் பிரதமர் நிவாரண நிதியை காங்கிரஸ் தலைமை தவறாக பயன்படுத்தியதாக பாரதிய ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா குற்றம்சாட்டியதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ருவிட்டரில் பதிலளித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “2005 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிக்கும் 2020 ஆம் ஆண்டில் நடைபெற்ற சீன ஆக்கிரமிப்புக்கும் என்ன தொடர்பு எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் பாஜக முடிச்சு போடுகிறது என குற்றஞ்சாட்டியுள்ள அவர், சீன ஆக்கிரமிப்பை எப்படி, எப்போது மோடி அரசு அகற்றப்போகிறது என்ற கேள்விக்கு ஏன் இதுவரை பதில் இல்லை? என்றும் அவர் சாடியுள்ளார்.

ராஜீவ் காந்தி அறக் கட்டளை அந்தமான் தீவுகளில் சுனாமி நிவாரணப் பணிகளுக்காகப் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து 20 லட்சம் ரூபாய் பெற்றது உண்மைதான் என்றும் ஒவ்வொரு ரூபாயும் நிவாரணப் பணிகளுக்குச் செலவழிக்கப்பட்டு கணக்கு சமர்பிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.




பிரதமர் நிவாரண நிதிக்கும், சீன ஆக்கிரமிப்பிற்கும் என்ன சம்பந்தம் இருக்கு என நிதியமைச்சர் பா.சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு