23,Nov 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டுஇடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் துரைராசா ரவிகரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு மே மாதம் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி, முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில், கோட்டாபய கடற்படை முகாமிற்கு முன்பாக இடம்பெற்ற காணி அபகரிப்பிற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதாக வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அத்துடன் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன் பிணைகோரி, சட்டத்தரணி ஊடாக பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணியைச் சேர்ந்த அன்ரனி ஜெகநாதன் பீற்றர் இளஞ்செளியன், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளன நிர்வாக உறுப்பினர் அன்னலிங்கம் சண்முகலிங்கம் ஆகியோரும் காவல்துறையினரால், கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

குறித்த நால்வர் மீதும் தொடரப்பட்ட வழக்கின் விசாரணைகள் கடந்த இரண்டரை வருடங்களுக்கு மேலாக இடம்பெற்றுவரும் நிலையில், நேற்றைய தினம் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில், நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நேற்றைய வழக்கு விசாரணைகளில் நில அளவைத் திணைக்களத்தினால் குற்றஞ்சாட்டப்பட்டோர் சார்பில், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வரும் மன்றில் முன்னிலையாகிருந்தனர்.

இந்தநிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து இந்த வழக்குடன் தொடர்புடைய அறிக்கை இன்னும் கிடைககப்பெறாமையால், குறித்த வழக்கின் விசாரணைகள் அடுத்த ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

.




முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டுஇடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் துரைராசா ரவிகரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு மே மாதம் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு