தொழில் நோக்கத்தில் வௌிநாடுகளுக்கு சென்று நாடு திரும்ப முடியாமல் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சிக்கியிருந்த 149 இலங்கையர்கள் இன்று (01) காலை நாடு திரும்பியுள்ளனர்.
அதனடிப்படையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 49 பேர், கட்டாரில் இருந்து 95 பேர் மற்றும் ஜேர்மனியில் இருந்து 5 பேர் இவ்வாறு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments
No Comments Here ..