இலங்கையின் தொழிற்படையில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்து, வர்த்தக தலைமைத்துவத்தில் கூடுதலான பெண்களை ஊக்குவிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளதாக சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இந்நிறுவனம் இலங்கையில் கால்பதித்து 50 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இதனை முன்னிட்டு முகாமைத்துவத்தில் பெண்கள் என்ற கருத்தரங்கை நடத்த உதவுவதில் பெருமை அடைவதாக சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் ´வேலையில் பெண்;´ திட்டத்தை வழிநடத்தும் முகாமையாளர் சாரா ட்விக் (Sarah Twigg) தெரிவித்தார்.
0 Comments
No Comments Here ..