05,Apr 2025 (Sat)
  
CH
உலக செய்தி

இருண்ட சுரங்கப்பாதைக்குள் கிடைத்த வெளிச்சமே கொரோனா தடுப்பூசி- உலக சுகாதார அமைப்பு

கொவிட் 19 தடுப்பூசியின் ஊடாக உலகளாவிய ரீதியல் பரவியுள்ள கொவிட் தொற்றை விரைவில் இல்லாதொழிக்க முடியும் என எதிர்பார்க்க முடியாதுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கான பல தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு, பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிக்கு பிரிதானியாவில் பொது பயன்பாட்டுக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சீனாவும் ரஷ்யாவும் தங்களது நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள கொவிட் 19 தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளன.

எவ்வாறாயினும், கொவிட் 19 தடுப்பூசியானது கொரோனா தொற்று நோய்க்கான பதில் இல்லை என்று ஜெனீவாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது உலக சுகாதார அமைப்பின் அவசரகாலத் திட்டங்களுக்கான நிர்வாக இயக்குநர் மைக் ரயன் தெரிவித்தார்.

இருப்பினும் கொவிட் 19 தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டமையானது “இருண்ட சுரங்கப் பாதையின் மூலையிலிருந்து கிடைக்கும் ஒரு வெளிச்சம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.




இருண்ட சுரங்கப்பாதைக்குள் கிடைத்த வெளிச்சமே கொரோனா தடுப்பூசி- உலக சுகாதார அமைப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு