24,Nov 2024 (Sun)
  
CH
சினிமா

காதல் தோல்வியில் புலம்பும் நடிகை மீரா நந்தன்..

மலையாள திரையுலகில் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தவர் நடிகை மீரா நந்தன். இவர் வால்மேகி எனும் திரைப்படத்தின் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதன்பின் தமிழில் வெளியான அய்யனார், காதலுக்கு மரணமில்லை, மற்றும் சண்டமாருதம் எனும் திரைப்படங்களில் இதுவரை நடித்து வந்துள்ளார்.

ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக இவர் நடிப்பில் ஒரு திரைப்படம் கூட தமிழிலும், மலையளித்தும் வெளியாகவில்லை. அதற்கு முக்கிய காரணம் இவரின் காதல் தோல்வி தானாம்.

ஆம் பிரபல நடிகர் ஒருவரை உருகி உருகி காதலித்து வந்தாராம் நடிகை மீரா நந்தன். ஆனால் அவர் தன்னை ஏமாற்றி விட்டு சென்றுவிட்டதனால், மன அழுத்தத்தில் இத்தனை ஆண்டுகள் இருந்துள்ளாராம்.

மேலும் தற்போது தான் அந்த காதல் தோல்வியில் இருந்து மீண்டு வந்துகொண்டு இருக்கிறேன் என்று கூடிய விரைவில் படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்துவேன் என்று பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார் நடிகை மீரா நந்தன்.




காதல் தோல்வியில் புலம்பும் நடிகை மீரா நந்தன்..

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு