அவுஸ்ரேலியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரான மெல்பேர்னில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, சர்வதேச பயணிகள் விமானம் இன்று தரையிறங்கியுள்ளது.
கொரோனா நோய்ப்பரவல் காரணமாக முடக்கப்பட்டிருந்த மெல்பேர்ன் மாகாணத்தில் 5 மாதங்களுக்குப் பின் சர்வதேச விமானம் ஒன்று தரையிறங்குவது இதுவே முதன் முறையாகும்.
கொழும்பிலிருந்து புறப்பட்டுச் சென்ற ஸ்ரீலங்கன் விமான சேவைகளுக்குச் சொந்தமான விமானம், இன்று காலை மெல்பேர்ன் விமான நிலையத்தில் தரையிறங்கத் திட்டமிடப்பட்டுள்ள ஐந்து விமானங்களில் ஒன்றாகும்.
இதற்கு முன், வெளிநாடுகளிலிருந்து திரும்பியோரிடமிருந்து ஹோட்டல் ஊழியர்களுக்குக் கொரோனா தொற்று பரவியது.
அதன் விளைவாக, விக்டோரியா மாநிலத்தில் 20,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், தற்சமயம் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு புதிய தனிமைப்படுத்தல் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
இனிவரும் நாள்களில், ஆயிரக்கணக்கானோர் விக்டோரியா மாநிலத்துக்கு வாரந்தோறும் செல்வர் என்பதால், பொலிஸ் அதிகாரிகள் விதிமுறைகளை முனைப்புடன் செயல்படுத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவுஸ்ரேலியாவில் இதுவரை 27,972 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், 908 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..