ஜெயலலிதா குறித்து திமுக எம்.பி. ஆ.ராசா முன்வைத்த விமர்சனத்திற்கு வழக்கறிஞர் ஜோதி பதில் அளித்துள்ளார்.
டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்காக ஆஜரான வழக்கறிஞர் ஜோதி சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* ஆ.ராசா பேசிய விவகாரத்தில் எனக்கு வருத்தம். ஜெயலலிதாவுக்காக 11 வழக்குகளில் நான் வாதாடியுள்ளேன். ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு பற்றி எனக்கு தெரியும் என்பதால் நான் பதில் கூறுகிறேன்.
* சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பில் ஜெயலலிதா அரசியலமைப்பு சட்டத்தை மீறியவர், கொள்ளைக்காரி என நீதிமன்றம் எங்கும் குறிப்பிடப்படவில்லை. பிரிவு 394ன் கீழ் ஜெயலலிதா குற்றமற்றவர்.
* ஆ.ராசா 2ஜி வழக்கில் இருந்து விடுதலையானது போலவே ஜெயலலிதாவும் வழக்கில் இருந்து விடுதலையாகி விட்டார்.
* ஜெயலலிதா இறந்துவிட்டதற்கான சான்றிதழை சசிகலா தரப்பு ஏன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை?
* ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழை தாக்கல் செய்திருந்தால் வழக்கில் இருந்து அவர் பெயர் விடுவிக்கப்பட்டிருக்கும்.
* முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி திமுக எம்.பி. ஆ.ராசா அவதூறாக பேசி வருகிறார்.
* சொத்துக்குவிப்பு வழக்கு குறித்து ஆ.ராசாவுடன் விவாதிக்க நான் தயார். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
No Comments Here ..