உலகின் முன்னணி சரக்கேற்றல் சேவைகளை வழங்கும் DHL Express, இலங்கையில் சேவைச் சிறப்பு மற்றும் முன்னணி சரக்கேற்றல் சேவைகளை வழங்கலில் நான்கு தசாப்த கால பூர்த்தியை கொண்டாடுகின்றது.
1980 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட DHL Express ஸ்ரீ லங்கா, தொடர்ந்தும் இலங்கையின் எதிர்காலத்தில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளதுடன், உள்நாட்டு சரக்கேற்றல் துறையின் அபிவிருத்தியில் பங்களிப்பு வழங்கியுள்ளது. கடந்த நான்கு தசாப்த காலங்களில், நிறுவனம் தனது சர்வதேச செயற்பாடுகளின் சிறந்த நடவடிக்கைகளை தொடர்ச்சியாக இலங்கையில் நடைமுறைப்படுத்தியுள்ளதுடன், துறைசார் முன்னோடியான தீர்வுகளை வெளிப்படுத்தியுள்ளதுடன், தனது சேவை பிரசன்னத்தை வலிமைப்படுத்தி, தனது இலங்கையின் அனுபவத்தைப் பயன்படுத்தி இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்துடன் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
DHL Express ஆசியா பசுபிக் பிரதம நிறைவேற்று அதிகாரி கென் லீ கருத்துத் தெரிவிக்கையில், “DHL Express ஸ்ரீ லங்கா தனது 40 வருட பூர்த்தியை கொண்டாடும் நிலையில், துறையில் பங்களிப்பு வழங்கியுள்ள அதன் கடந்த கால செயற்பாடுகளை மீட்டுப் பார்க்கும் போது நாம் பெருமை கொள்கின்றோம். எமது தொடர்ச்சியான சிறந்த செயற்பாடுகளுக்காக வாடிக்கையாளர்கள் மற்றும் தொழிற்துறை அமைப்புகளிடமிருந்து விருதுகளையும் கௌரவிப்புகளையும் பெற்றுள்ளோம்.
இலங்கையில் எமது தொடர்ச்சியான வெற்றிகரமான வளர்ச்சி என்பது, உள்நாட்டு நிர்வாக அணியினர் மற்றும் ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றியிருந்தமையின் வெளிப்பாடாக அமைந்துள்ளது. தற்போதைய சவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும், எமது அணியினரால் மேலும் பல தசாப்த காலங்களில் இலங்கையில் வெற்றிகரமாக இயங்கி வளர்ச்சியை பதிவு செய்யக்கூடியதாக இருக்கும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.” என்றார்.
DHL Express ஸ்ரீ லங்கா இலங்கையின் முகாமையாளர் திமித்ரி பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “புத்தாக்க செயற்பாட்டாளர் மற்றும் சரக்குக் கையாளல் சேவை வழங்குநர் எனும் வகையில் இலங்கையில் 40 வருட பூர்த்தியைக் கொண்டாடுவதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம். வளர்ச்சி என்பதன் புதிய அத்தியாயத்தில் நாம் காலடி பதித்துள்ள நிலையில், முன்னோடியான நிலைப்பாட்டுடன் நாம் தேசத்துக்கு சேவைகளை வழங்க உறுதியாகவுள்ளோம். நான்கு தசாப்த காலமாக எமது வெற்றிகரமான செயற்பாட்டில் எமது செயலணியினரின் அர்ப்பணிப்பான செயற்பாடுகள் பங்களிப்பு வழங்கியுள்ளன. எமது ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் உதவிகளுக்காக நாம் நன்றிக்கடன்பட்டுள்ளோம். எதிர்காலத்தை நோக்கும் போது, எமது வாடிக்கையாளர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட நோக்குடன் சேவைகளைப் பெற்றுக் கொடுக்க எதிர்பார்ப்பதுடன், ஒப்பற்ற சரக்குக் கையாளல் ஆற்றல்கள் மற்றும் தொடர்ச்சியான சிறந்த வாடிக்கையாளர் பராமரிப்பு ஆகியவற்றுடன் இயங்கத் திட்டமிட்டுள்ளது.” என்றார்.
இலங்கையில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்திருந்த போது DHL Express ஸ்ரீ லங்கா எய்தியிருந்த பல மைற்கல் சாதனைகளில், 1992 ஆம் ஆண்டில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் குழுமத்துடன் இணைப் பங்காண்மையை ஏற்படுத்தியிருந்தமை மற்றும் நவீன வசதிகள் படைத்த அலுவலகத் தொகுதியை சர்வதேச விமான நிலையத்தில் நிறுவியிருந்தமை போன்றன முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த வளாகத்தில் 24 மணி நேர சுங்க விடுவிப்பு பகுதி மற்றும் 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை உதவி போன்றன காணப்படுவதுடன், இலங்கையின் வியாபாரங்களுக்கு ஒப்பற்ற துரித விநியோக சேவைகளை நாட்டினுள் மேற்கொள்ள உதவியாக அமைந்துள்ளது. 2016 ஆம் ஆண்டில், தனது வாகனத் தொடரணிக்கு வலிமை சேர்த்திடும் வகையில், 45 புதிய Mercedes- Benz Vito வாகனங்களை இணைத்திருந்தது. 2018 ஆம் ஆண்டில் உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்கு புரட்சிகரமான மற்றும் சௌகரியமான பொதிகள் பெற்றுக் கொள்ளல் சேவையை பெற்றுக் கொடுக்கும் வகையில் ‘DHL Parcel Locker’ சேவையை அறிமுகம் செய்திருந்தது. இதனூடாக, வாடிக்கையாளர்கள் தமது இருப்பிடங்களில் இல்லாத காலப்பகுதியிலும், அவர்களின் தெரிவின் பிரகாரம், குறிப்பிடும் பகுதிகளுக்கு அவர்களின் பொதிகள் விநியோகிக்கப்படும். DHL இன் 19ஆவது சேவைப் பகுதி யூனியன் பிளேஸில் 2019 ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது. இதனூடாக DHL இன் உலகத்தரம் வாய்ந்த சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் அர்ப்பணிப்பு மேலும் உறுதி செய்யப்பட்டிருந்தது.
e-வணிகச் செயற்பாடுகள் துரித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில், DHL இனால் அதன் முதலீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், உயர் தரம் வாய்ந்த e-வணிக சேவைகள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கங்கள் போன்றன மாறிவரும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவ்வாறான முதலீடுகளில், அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய DHL Express Mobile app அடங்கியுள்ளது. இதனூடாக வாடிக்கையாளர்களுக்கு துரிதமாக தமது சரக்கேற்றல்களை கண்காணிப்பது மற்றும் விநியோகங்களை நிர்வகிப்பது, பொதிகளை பெற்றுக் கொள்ள அல்லது ஒப்படைக்க அருகிலுள்ள DHL சேவை நிலையத்தை இனங்காண்பது மற்றும் கட்டணங்களை அறிந்து கொள்வது போன்ற சகல செயற்பாடுகளையும் ஒரே app இனூடாக மேற்கொள்ள முடியும். மேலும், வாடிக்கையாளர்களுக்கு வியாபார வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்வது மற்றும் எல்லைகள் கடந்த வியாபாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு உதவிகளை வழங்கும் தனது அர்ப்பணிப்புக்கமைய, DHL ஸ்ரீ லங்கா விரைவில் MyDHL+எனும் புதிய மொபைல் மற்றும் பாவனையாளருக்கு நட்பான சரக்கனுப்பல் கட்டமைப்பை அறிமுகம் செய்யவுள்ளது. இதில் வேகமான மற்றும் ஒப்பற்ற சரக்கனுப்பல் அனுபவத்தை பெற்றுக் கொடுப்பதற்கான பரந்தளவு ஒன்லைன் logistics tools கள் காணப்படுகின்றன.
இளைஞர்களுக்கு தமது எதிர்பார்ப்புகளை பின்தொடரவும், தேசத்தின் சமூக-பொருளாதார முன்னேற்றத்துக்கு பங்களிப்பு வழங்கும் வகையிலும், 2018 ஆம் ஆண்டில், DHL Express ஸ்ரீ லங்கா, இலங்கையின் SOS சிறுவர் கிராமங்களுடன் கைகோர்த்திருந்தது. இதனூடாக சவால்கள் நிறைந்த பின்புலத்தில் காணப்படும் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளவும், வலுவூட்டலை ஏற்படுத்திக் கொடுக்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த காலங்களில் DHL Express ஸ்ரீ லங்கா தொடர்ச்சியாக பல்வேறு சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்தியிருந்தது. இதில் ‘Mother Lanka’ நலன்புரி மையம் (2017) உடனான கைகோர்ப்பு, புற்றுநோய் சிகிச்சைக்காக Trail ஸ்ரீ லங்கா 670 கிலோமீற்றர் நடை (2016), இரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்திருந்தமை, கங்கொடவில சிறுவர் இல்லத்தில் தகவல் தொழில்நுட்ப நிலையத்தை புதுப்பித்தல், கொழும்பு மனநல வைத்தியசாலையில் திட்டங்கள் (2015) போன்றன அடங்குகின்றன. இலங்கையின் இளைஞருக்கு ரக்பி உலகக் கிண்ணத்தின் பந்தை விநியோகிக்கும் வாழ்நாளில் கிடைக்கும் அரிய சந்தர்ப்பத்தையும் DHL Express ஸ்ரீ லங்கா ஏற்படுத்தியிருந்தது.
DHL இன் சர்வதேச இலக்குகளின் பிரகாரம், அதிகளவு தெரிவுக்குரிய தொழில் வழங்குநராகத் திகழ்வது என்பது இன் எதிர்பார்ப்பாகும். அதற்கமைய, DHL ஸ்ரீ லங்கா வெற்றிகரமாக திறமைசாலிகளை உள்வாங்கியுள்ளதுடன், பணியாற்றுவதற்கு சிறந்த பணியிடச் சூழலை ஏற்படுத்திக் கொடுத்திருந்தமைக்காக தொடர்ச்சியாக கௌரவிக்கப்பட்டிருந்தது. DHL ஸ்ரீ லங்கா அறிமுக ‘10 Best Workplaces for Millennials in Sri Lanka 2020’ நிகழ்வில் ‘No. 1 in the Most Respected Entities list for Logistics companies in 2020’ ஆக தெரிவு செய்யப்பட்டிருந்தது. மேலும், தொடர்ச்சியான ஆறு வருடங்களாக Great Place to Work® கௌரவிப்பையும் DHL ஸ்ரீ லங்கா பெற்றுள்ளது.
0 Comments
No Comments Here ..