இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கும் (வயது 94), அவரது கணவர் இளவரசர் பிலிப்புக்கும் (99) வரும் வாரங்களில் அமெரிக்காவின் பைசர், ஜெர்மனியின் பயோ என்டெக் நிறுவனங்கள் கூட்டாக தயாரித்துள்ள தடுப்பூசி போடப்படும் என்று இங்கிலாந்து நாளிதழ் ‘டெய்லி மெயில்’ கூறுகிறது.
கடந்த புதன்கிழமை, இந்த தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கான அனுமதியை இங்கிலாந்து வழங்கியது நினைவு கூரத்தக்கது.
இந்த தடுப்பூசியின் 8 இலட்சம் ‘டோஸ்’, அடுத்த வாரம் இங்கிலாந்து வந்து சேரும் என அதன் மந்திரிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த தடுப்பூசிகள் வந்ததும், நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் அதிக முன்னுரிமை குழுக்களில் உள்ளவர்களுக்கு 50 வைத்தியசாலை மையங்களில் தடுப்பூசி போடப்படும் என இங்கிலாந்து ஊடகங்கள் கூறுகின்றன.
0 Comments
No Comments Here ..