04,May 2024 (Sat)
  
CH
ஆரோக்கியம்

தைராய்டு இருப்பவர்கள் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க

உடலுக்குத் தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் நாளமில்லா சுரப்பியே தைராய்டு. இது முன்கழுத்தில் மூச்சுக்குழல் பகுதியில் அமைந்துள்ளது.

இதில் சுரக்கப்படும் ஹார்மோன்கள், உடல் வெப்பநிலையை சமநிலையில் வைக்கவும், உடலுக்கு அத்தியாவசியமான வளர்ச்சிதை மாற்றங்களிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தைராய்டு பிரச்சனையை என்னத்தான் மாத்திரைகளை எடுத்து கொண்டாலும் அதனுடன் முறையான உணவு பழக்கமும் வேண்டும்.

ஏனெனில் சில உணவுகள் தைராய்டு பிரச்சினையை மேலும் அதிகரித்து பிரச்சினையை மேசமாக்கும்.

எனவே அந்த உணவுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொண்டு அவற்றை தவிர்ப்பது நல்லது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • கால்சியம் அதிகம் நிறைந்த பால் சம்பந்தப்பட்ட உணவுப் பொருளை முடிந்த வரையில் தவிர்க்க வேண்டும். அதே சமயம் கொழுப்பு நீக்கப்பட்ட பாலை குடிப்பது நல்லது.
  • தைராய்டு பிரச்சனை இருந்தால, ஆல்கஹாலை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது தைராய்டு சுரப்பியையே பாதிக்கும்.
  • பேக்கரிப் பொருட்களை தவிர்ப்பதும் நல்லது. ஏனெனில் பிரெட் போன்ற பேக்கரி வகை உணவுகளில் ஓரளவு அயோடின் இருந்தாலும், செரிமானம் உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தி தைராய்டு சுரப்பில் பாதிப்பை உண்டாக்கும்.
  • முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் போன்ற காய்கறிகள் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கும். எனவே, முடிந்த வரையில் இந்த மாதிரியான காய்கறிகளை தவிர்க்க வேண்டும்.
  • மயோனைஸ் மற்றும் வெண்ணெயில் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. இவை தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் இடையூறு ஏற்பட்டு, அதனால் தைராக்ஸின் ஹார்மோனின் அளவு மேலும் குறையும்.





தைராய்டு இருப்பவர்கள் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு