வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் சுமார் 40 ஆயிரம் பேர் நாடு திரும்பும் எதிர்பார்ப்புடன் உள்ளதாக விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்திக்கான இராஜாங்க செயலாளர் சானக தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றினால் வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்களில் சுமார் 50 ஆயிரம் பேர் இதுவரை நாடு திரும்பியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், வெளிநாடுகளில் தங்கியுள்ளவர்களை விரைவாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய கட்டம் கட்டமாக அவர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலங்கையர்கள் தற்போது நாட்டிற்கு அழைத்து வரப்படுகின்றனர் என்றும் ஏனைய நாடுகளில் உள்ளவர்களையும் சுகாதார துறையினரின் பரிந்துரைகளுக்கு அமைய நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 Comments
No Comments Here ..