யாழ்ப்பாணம் – தென்மராட்சி நுணாவில் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி மீது கார் மோதியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை) நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நுணாவில் சந்திக்கு அண்மையில் ரயர் கடைக்கு முன்பாக ரயர் திருத்த வேலைக்காக எரிபொருள் தாங்கி வாகனம் ஒன்று நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் ஒன்று அந்த வாகனத்தின் பின்புறமாக மோதியதில் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதனையடுத்து, அவர்கள் மூவரும் உடனடியாகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் படுகாயமடைந்த பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..