26,Apr 2024 (Fri)
  
CH
கட்டுரைகள்

நுரையீரலை பாதுகாக்கும் ஐந்து எளிமையான யோகாசனங்கள்...

ஏழு கழுதை என்ன, எட்டு, ஒன்பது கழுதை வயதானாலும், விளையாட்டுத்தனம் மாறாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். சிலர் கார்ட்டூன் பார்ப்பார்கள், சிலர் கேம்ஸ் விளையாடுவார்கள். இங்கே, பிளே ஸ்டேஷன் மீது தீராத காதல் கொண்ட, ஒரு தீராத விளையாட்டு பிள்ளை. மனைவிக்கு இது விளையாட்டு பொருள் என்று தெரிந்தால், திட்டுவார் என்று பயந்து. PS5 வாங்கி, அதை வீட்டில் மனைவியிடம் Air Purifier என்று பொய் கூறியுள்ளார்.

தைவான் நாட்டை சேர்ந்த அவர், வாங்கிய பிளே ஸ்டேஷன் 5 நவம்பர் 12ம் தேதி தான் அறிமுகமானது. இதுவரை விற்பனையான பிற பிளே ஸ்டேஷன்களை காட்டிலும், சோனி நிறுவனம் வெளியிட்ட இந்த பிளே ஸ்டேஷன் 5 அதிகளவில் விற்பனையாகியுள்ளது என்று கூறப்படுகிறது.

உலகளவிலான நிறைய விளையாட்டு பிரியர்கள், இந்த பிளே ஸ்டேஷன் 5'வை வாங்க வழிமேல் விழி வைத்து காத்திருந்தனர் என்று தான் கூற வேண்டும்.

ஜின் வூ எனும் தைவானை சேர்ந்த ஆண், தனது மனைவிக்கு தெரியாமல் தனக்கு பிடித்த பிளே ஸ்டேஷன் 5வை வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்து விட்டார். அதிக விலை கொண்ட இந்த பொருளை, விளையாட வாங்கி வந்ததை அறிந்தால் மனைவி கோபித்துக் கொள்வார் என்பதால், அதை ஏர் பியூரிஃபயர் என்று பொய் கூறி உள்ளார்.

ஜின் வூவின் மனைவி ஒரு கட்டத்தில், ஏர் பியூரிஃபயர் இல்லை என்பதை தெரிந்து கொண்டார். ஆயினும், அவருக்கு, இது எந்த மாதிரியான விளையாட்டு பொருள் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போனது.

ஜின் வூவிற்கு ஆன்லைனில் இருந்து ஒருவர் குறைந்த விலைக்கு பிளே ஸ்டேஷன் விற்பனை என்ற விளம்பரம் பார்த்து அளித்ததாக கூறி இருக்கிறார். மேலும், ஆரம்பத்தில் பேசிய பெண்மணி (ஜின் வூவின் மனைவி) பிளே ஸ்டேஷன் பற்றி சரியாக தகவல் கூறவில்லை என்றும் கூறி இருக்கிறார்.

பதட்டம் அடைந்த ஜின் வூ, உடனே மனைவியிடம் உண்மையை கூறி இருக்கிறார். உண்மை அறிந்த ஜின் வூவின் மனைவி, கடுங்கோபம் கொண்ட கணவரை உடனடியாக பிளே ஸ்டேஷனை விற்க கூறி சண்டையிட்டு, விற்கவும் செய்துவிட்டார்.




நுரையீரலை பாதுகாக்கும் ஐந்து எளிமையான யோகாசனங்கள்...

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு