ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்பினர் இணைந்து இன்று (15) கடவத்த பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர், சிறைச்சாலையில் உள்ள கைதிகள் முன்வைத்த கோரிக்கை நியாயமானது எனவும் இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..