தமிழ் சின்னத்திரையை சில நாட்களாக அதிர்ச்சியைப் ஏற்படுத்திய நிகழ்வு நடிகையும் வி ஜேவுமான சித்ராவின் தற்கொலை.
தொகுப்பாளினியாக இருந்து பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தவர் சித்ரா. தற்போது தற்கொலையா கொலையா என்று பலகோணங்களில் போலிஸார் விசாரித்து வருகிறார்கள்.
பல காரணங்கள் கூறப்பட்டு வந்த நிலையில்,கடந்த சில எபிசோடுகளில் இருவருக்குமான ரொமான்ஸ் காட்சிகள் அதிகமாகவே காணப்பட்டது. சினிமாக்களில் முத்தக்காட்சியில் நடிப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் சீரியல்களில் நடிகைகள் அந்த மாதிரி முத்தக் காட்சிகளில் நடித்து விட்டால் அதை ஊதிப் பெரிதாக்கி விடுவார்கள்.
அப்படித்தான் குமரன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு முத்தம் கொடுத்த காட்சி பெரும் வரவேற்பை பெற்றது. அதேசமயம் சித்ராவுக்கும் அவரது கணவருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டதற்கு இதுதான் காரணம் என்றும் இதற்காக கணவர் சீரியல் செட்டிற்கு குடித்துவிட்டு சென்று சண்டையும் போட்டுள்ளார் என பிரபல முன்னணி செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
0 Comments
No Comments Here ..