பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சின்யின் மூலம் பிரபலமானவர்களில் முக்கியமான நட்சத்திரமாக பாலாஜி உள்ளார். புதிய முகமாக அறிமுகமாகி ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமாகியுள்ளார்.
மேலும் இந்த சீசனில் அதிக ரசிகர்களை வைத்துள்ள இவர் பைனல்ஸ் வரை செல்வார் என பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பிரபல நடிகையான யாஷிகா ஆனந்த், பாலாஜி முருகதாஸ் உடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். மேலும் அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படமும் இணையத்தில் பரவியது.
மேலும் தற்போது ரசிகர்கள் ஒருவர் “பாலாஜி உங்களின் நண்பரா?, என் ஒருவரை ஒருவர் இன்ஸ்டாகிராமில் பின் தொடர கூட இல்லை? ” என்ற கேள்வியை யாஷிகாவிடம் கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள யாஷிகா, அவர் எனக்கு நல்ல நண்பர். அவரை நினைத்தால் எனக்கு சந்தோஷமாக உள்ளது. ஏன்னென்றால் அவர் இந்த இடத்திற்கு வர பல வருடங்கள் கaஷ்டப்பட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..