12,May 2024 (Sun)
  
CH
இந்திய செய்தி

1971ல் பாக்.,ஐ மண்டியிட வைத்த இந்தியா : டுவிட்டரில் டிரெண்டிங்

1971ல் நடந்த இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரில், இந்திய ராணுவம் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றது. இதை டுவிட்டரில் பல்வேறு ஹேஷ்டாக்குகளில் இந்தியர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.

பாகிஸ்தானின் ஒரு பகுதியாக கிழக்கு பாகிஸ்தான்(இப்போது வங்கதேசம்) இருந்தது. இதன் விடுதலைக்காக இந்தியா ராணுவம் அப்போது உதவியது. 1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போரில் இந்தியா வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றது. இந்தபோரில் பாகிஸ்தான் ராணுவ தளபதி அமீர் அப்துல்லா கான் நியாசி தலைமையில் 93 ஆயிரம் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், சரணடைந்தனர். மேலும் வங்கதேசம் என்ற புதிய நாடு உருவாக இருந்ததும் இந்தப் போர்தான்.

இந்த போரின் வெற்றியை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16-ம் தேதி விஜய் திவாஸ் தினமாக இந்தியா அரசால் கொண்டாடப்படுகிறது. இந்த போரின் 50வது பொன்விழா வெற்றி ஆண்டு இன்று முதல் கொண்டாடப்படுகிறது. போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு, பிரதமர் மோடி, முப்படை தலைமை தளபதி, முப்படை தளபதிகள், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். நினைவிடத்தில் உள்ள அணையா ஜோதியில் இருந்து, பொன்விழா வெற்றி ஜோதியை பிரதமர் ஏற்றி வைத்தார்.

சமூகவலைதளமான டுவிட்டரிலும் இந்தியா - பாகிஸ்தான் போரில் இந்தியாவின் வெற்றியை பலரும் கொண்டாடி வருகின்றனர். இந்திய ராணுவத்தின் பலத்தையும், பாகிஸ்தான் 93 ஆயிரம் ராணுவ வீரர்களுடன் சரண் அடைந்த விஷயத்தையும், அப்போது இப்படி ஒரு போரை சவாலாக எடுத்து சென்ற அப்போதைய பிரதமர் இந்திராவையும் குறிப்பிட்டு பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

''1971 ஆம் ஆண்டு இந்தியா - பாக்., போரில் எங்கள் வீரர்களின் தைரியத்திற்கும், தியாகத்திற்கும் வணக்கம் செலுத்துகிறோம். டிசம்பர் 16 என்பது நாம் அனைவரும் பெருமைமிக்க இதயங்களுடன் திரும்பிப் பார்க்கும் ஒரு நாள். எங்களுக்காக போராடி வென்ற அனைத்து தைரியமான ஆத்மாக்களுக்கும் வணக்கம் செலுத்துகிறோம்'' என ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.

மற்றொருவர், ''வங்கதேசத்தின் விடுதலைக்கு வழிவகுத்த 1971 போரில் பாகிஸ்தானை வென்ற இந்தியாவின் வரலாற்று நிகழ்வில் இந்திய ஆயுதப்படைகளின் துணிச்சலான வீரர்களுக்கு வணக்கம். தியாகிகளுக்கு எனது தாழ்மையான அஞ்சலி. ஜெய் ஹிந்த்!'' என பதிவிட்டுள்ளார்.

''கடமையே பெரிது என நாட்டுக்காக போரில் உயிர் நீத்த நமது ராணுவ ஹீரோக்களுக்கு வீர வணக்கம் செய்கிறோம். இந்திய ராணுவத்தின் வலிமை'' என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

இப்படி பலரும் நமது ராணுவத்தையும், ராணுவ வீரர்களையும் போற்றியும், வாழ்த்தியும், வீர வணக்கங்கள் செலுத்தியும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.




1971ல் பாக்.,ஐ மண்டியிட வைத்த இந்தியா : டுவிட்டரில் டிரெண்டிங்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு