04,May 2024 (Sat)
  
CH
ஆரோக்கியம்

பானை போன்று வீங்கியிருக்கும் தொப்பையைக் குறைக்க இரவு தூங்கும் முன் குடிக்க வேண்டிய பானங்கள்!

உடல் எடையைக் குறைக்க மேற்கொள்ளும் பயணம் மிகவும் கடினமாக இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. அதிலும் பானை போன்று வீங்கி இருக்கும் தொப்பையைக் குறைப்பது என்பது இன்னும் சவாலானது. ஒருவருக்கு அசிங்கமாக தொங்கும் தொப்பையைக் குறைக்க உடற்பயிற்சிகள் பெரிதும் உதவி புரியும் என்றாலும், ஒருசில உணவுப் பொருட்களும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க உதவும்.

உங்களுக்கு தொப்பை இருந்து, அதைக் குறைக்க முயற்சிக்காமல் இருந்தால், அதன் விளைவாக உங்கள் இடுப்பளவு அதிகரிப்பதோடு மட்டுமின்றி, இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் போன்றவற்றின் அபாயத்தையும் அதிகரித்துவிடும். உங்களுக்கு இருக்கும் தொப்பையை அதிகம் கஷ்டப்படாமல் மிகவும் சுலபமாக குறைக்க வேண்டுமா? அப்படியானால் இரவு தூங்கும் முன் ஒருசில பானங்களைக் குடித்துவிட்டு தூங்குங்கள். இதனால் உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலில் உள்ள கொழுப்புக்கள் விரைவாக எரிக்கப்படும்.

இப்போது தொப்பையைக் குறைக்க இரவு நேரத்தில் குடிக்க வேண்டிய சில முக்கிய பானங்களைக் காண்போம்

பானம் #1

தேவையான பொருட்கள்:


* வெள்ளரிக்காய் - 1 (தோல் நீக்கி, துண்டுகளாக்கவும்)


* எலுமிச்சை சாறு - சுவைக்கேற்ப


* பார்ஸ்லி - ஒரு கொத்து


* தண்ணீர் - 1/2 கப்


செய்முறை:


பிளெண்டரில் எலுமிச்சை சாற்றினைத் தவிர மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் எலுமிச்சை சாற்றினை சுவைக்கேற்ப சேர்த்துக் கொள்ள வேண்டும்.


இந்த பானத்தில் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கும், உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்க தேவையான சத்துக்களும் நிறைந்துள்ளன. மேலும் இந்த பானம் நீர் எடையை எதிர்த்துப் போராட பெரிதும் உதவியாக இருக்கும். எனவே இந்த பானத்தை இரவு உணவிற்கு பின் குடியுங்கள்.


பானம் #2

தேவையான பொருட்கள்:


* துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்


* தண்ணீர் - 1 கப்


* தேன் - சுவைக்கேற்ப


* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்


செய்முறை:


ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் இஞ்சியை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, இரவு தூங்கும் முன் குடிக்கவும்.


பானம்#3

தேவையான பொருட்கள்:


* தண்ணீர் - 1 கப்


* பட்டைத் தூள் - 1 டீஸ்பூன்


செய்முறை:


* ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் பட்டைத் தூளை சேர்த்து இறக்கி, 10 நிமிடம் மூடி வைக்கவும்.

* பின் இரவு தூங்குவதற்கு அரை மணிநேரத்திற்கு முன் குடித்தால், நல்ல பலன் கிடைக்கும்.

பானம் #4

வெந்தய நீர் உடலில் வெப்பத்தை உருவாக்குவதோடு, எடை இழக்க உதவும். அதோடு, இதில் ஆன்டாசிட் போன்று செயல்படுகிறது மற்றும் செரிமான மண்டலத்தை பலப்படுத்தவும் உதவுகிறது. இந்த நீரை இரவு தூங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன் குடிக்க வேண்டும். இந்த பானம் தயாரிப்பதற்கு நீரில் வெந்தயத்தை தட்டிப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, 5 நிமிடம் மூடி வைத்து, பின் குடிக்க வேண்டும்.

பானம் #5

ல் எடையைக் குறைக்கத் தூண்டுவதோடு மட்டுமல்லாமல், வயிற்று உப்புசத்தையும் குறைக்கும். இதில் கால்சியம், பொட்டாசியம், ஃப்ளேவோனாய்டுகள் போன்றவை உள்ளதால், உடலில் தேங்கியுள்ள நச்சுக்கள் மற்றும் கெட்ட நீரை வெளியேற்றும்.

எப்படி தயாரிப்பது?

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி நன்கு கொதிக்கும் போது அடுப்பை அணைத்துவிட்டு, அதில் காய்ந்த சீமைச் சாமந்தி இலைகளைப் போட்டு 2 நிமிடம் மூடி வைக்க வேண்டும். பின் அதை வடிகட்டி, அதில் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து, இரவு தூங்கும் முன் குடித்தால், தொப்பை குறைவதோடு, நல்ல தூக்கமும் கிடைக்கும்.

பானம் #6 

வீட்டில் கற்றாழை செடி இருந்தால், அதன் இலையில் உள்ள ஜெல் பகுதியை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை ஜாரில் போட்டு, அதில் நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொண்டு, டம்ளரில் ஊற்றி, சுவைக்கு எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, இரவு தூங்கும் முன் குடித்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்துவிடுவதோடு, இந்த பானம் மலமிளக்கியாகவும் செயல்படும்.

பானம் #7 ஒரு டம்ளர் சூடான பாலில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, சுவைக்கு தேன் சேர்த்து, இரவு தூங்கும் முன் குடித்தால், சளி, ஜலதோஷம் போன்ற பிரச்சனைகள் நீங்குவதோடு, உடலின் மெட்டபாலிசம் மேம்படும், செரிமானம் சீராக இருக்கும். மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்று, செரிமானம் சிறப்பாக நடைபெற வழிவகுக்கும். அதோடு, இரவு நல்ல நிம்மதியான தூக்கத்தையும் பெற உதவும்.








பானை போன்று வீங்கியிருக்கும் தொப்பையைக் குறைக்க இரவு தூங்கும் முன் குடிக்க வேண்டிய பானங்கள்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு