கொரோனா நெருக்கடி காரணமாக அமெரிக்க ஜனாதிபதியாகத் தோ்வாகியுள்ள ஜோ பைடனின் பதவியேற்பு விழா பொதுமக்கள் வருகையின்றி எளிமையாக நடைபெறவுள்ளது.
இதுகுறித்து அந்த விழாவை நடத்தவிருக்கும் நாடாளுமன்ற கூட்டுக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அடுத்த ஜனாதிபதியாக ஜோ பைடனும் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸும் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளும் விழா எளிமையாக நடைபெறவுள்ளது.
அந்த விழாவுக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலான எம்.பிக்களே அழைக்கப்படுவாா்கள். விழாவின்போது பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். எனவே, பதவியேற்பை நேரில் பாா்ப்பதற்காக யாரும் வர வேண்டாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக, ஜனாதிபதி பதவியேற்பு விழாவுக்கு 2 இலட்சம் பேருக்கு அழைப்பு விடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..