02,Jan 2026 (Fri)
  
CH
சினிமா

வாழ்க்கையின் சோகம்! குக்கு வித் கோமாளி ஷகிலாவுக்கு நேர்ந்த சங்கடம்!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து உச்சத்தில் இருந்தவர் நடிகை ஷகீலா. கவர்ச்சி நடிகையாக பல படங்களில் நடித்து வந்தாலும் நல்ல மனம் கொண்டவர்.

சினிமாவின் மூலம் பலரை இவர் மகிழவைத்தாலும் சொந்த வாழ்க்கையில் கண்ணீர் விடும்படியான பல நிஜ சம்பவங்களும் உள்ளன.

அக்காலத்தில் அவரின் புகைப்படங்கள் கொண்ட சுவரொட்டிகள் வீதிகள் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தும். மலையாள சினிமாவில் பிரபல நடிகர்களின் படங்களை வசூலில் முறியடித்த நிகழ்வுகளும் உண்டு.

அவரின் வாழ்க்கை வரலாறு தற்போது படமாக்கப்பட்டுள்ளது. இதில் ஷகிலாவாக பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா நடித்துள்ளார். அண்மையில் இதன் டிரைலர் வெளியாகி பலரின் கவனத்தையும் ஈர்

படம் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வரும் வாரத்தில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் பிரஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இதில் ஷகிலா கலந்து கொண்டு பேசினார்.

இதில் யாராவது என்னை பற்றி தவறாக பேசினால் அதை பற்றி கவலைப்படுவதில்லை. ஏனெனில் என் முன்பாக வந்து பேசுவதற்கு அவர்களுக்கு தைரியம் கிடையாது.

என் வாழ்க்கையில் நான் செய்த தவறுகளை இனி வரும் நடிகைகளும், வேலைக்கு செல்லும் பெண்களும் செய்யக்கூடாது. இதுவே இப்படத்தின் மூலம் நான் சொல்லும் மெசேஜ் என கூறியுள்ளார்.

நான் ஏமாந்தது போல் எந்த பெண்ணும் ஏமாந்து விட வேண்டாம். நான் என்னுடைய வாழ்க்கை வரலாறு புத்தகத்திலும் அதைத்தான் கூறியுள்ளேன். இந்த மெசேஜ் போய் சேர்ந்தாலே எனக்கு திருப்தி தான்.

சுவாரசியத்திற்காக சில காட்சிகளை இணைத்து உள்ளார்கள். ஆனால் சொல்ல வரும் விசயம் இதுதான் என கூறியுள்ளார்.

கோழைகள் தான் தற்கொலை செய்து கொள்வார்கள். ஆண்கள் இல்லாமல் நான் இல்லை எனவும் கூறியுள்ளார்.




வாழ்க்கையின் சோகம்! குக்கு வித் கோமாளி ஷகிலாவுக்கு நேர்ந்த சங்கடம்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு