பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் அடுத்து முல்லையாக யார் நடிக்கப்போகிறார் என்ற கேள்வி தற்போது மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
சின்னத்திரையில் பிரபல நடிகையான சித்ரா கடந்த சில நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலையில் பல மர்மங்கள் இருந்து வந்த நிலையில். அவரது வருங்கால கணவர் மீது கொடுமைப்படுத்திய வழக்குப்போட்டு கைது செய்தனர்.
இந்த நிலையில் இவர் இறப்பதுற்கு முன்பு வரை விஜய் டிவியில் ஒளிபரப்பான "பாண்டியன் ஸ்டோர்ஸ்" என்ற நாடகத்தில் நடித்து வந்தார். அதில் இவர் ஏற்ற கதாபாத்திரம் "முல்லை" மக்களிடத்தில் மிகவும் பிரபலம். தற்போது சித்ரா இறந்துவிட்ட நிலையில் அடுத்ததாக யார் முல்லையாக நடிக்க போகிறார் என கேள்வி எழுப்பப்பட்டது.
அதில் பலரது பெயர்கள் பரிசிலிக்கப்பட்டு வந்தது. ஆனால் யாரை அதை கதாபாத்திரத்துக்கு யாரை நடிக்க வைத்தாலும் சித்ராவின் இடத்தை நிர்ப்பமுடியாது என பலரும் தங்கள் கருத்தை தெரிவித்தனர்.
ஆனால் ரசிகர்களுக்கு தற்போது ஆறுதல் அளிக்கும் வகையில் கீர்த்தனா தினகர் என்பவரது புகைப்படம் அமைந்துள்ளது. ஏனெனில் கீர்த்தனா ஆச்சு அசலாக சித்ராவை போலவே இருப்பார் அவரது புகைப்படங்களே அதை சொல்லும். இவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து அதனை பகிர்ந்தும் வந்தனர்.
இந்த சூழலில் பகிரப்பட்ட அவரது புகைப்படங்கள் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" குழுவின் கண்ணில் பட்டது. அவர்களும் இந்த புகைப்படத்தை பார்த்து ஆச்சரியப்பட்டனர். மேலும் முல்லை கதாபாத்திரத்தில் இவரையே நடிக்கவைக்கலாம் எனவும் ஆலோசித்து வருகின்றனர்.
இது மட்டும் நடந்துவிட்டால் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் முல்லை இல்லாத குறை தீரும் என ரசிகர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.













0 Comments
No Comments Here ..