25,Aug 2025 (Mon)
  
CH
சினிமா

18+ படங்களில் நடித்தபோது மிரட்டல் வந்தது

மலையாளத்தில் அறிமுகமாகி, தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மூன்று மொழிகளில் பிரபலமான நடிகையாக விளங்கி வருபவர் நடிகை ஷகீலா.

இவர் தற்போது படங்களில் நடிப்பதை குறைத்துவிட்டு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஆம் தற்போது கூட விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

சமீபத்தில் நடிகை ஷகீலாவிடம் நேர்காணல் ஒன்று நடைபெற்றது. இதில் பல சர்ச்சைக்குரிய கேள்விகளும், முகம் சுளிக்காமல் பதிலளித்துள்ளார் நடிகை ஷகீலா.

1. டிவி நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனுபவம்?

என் 28 ஆண்டுகளாக சினிமா வாழ்க்கையில் அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடித்துவிட்டேன். ஆனால், டிவியில் வரும் சமையல் நிகழ்ச்சி என்னை இன்னும் பிரபலமாக்கிவிட்டது.

2. இன்னும் வாடகை வீட்டில் வசிப்பது ஏன்?

நான் சம்பாதிப்பது அனைத்தையும் என் அக்காவிடம் தான் கொடுத்துவைத்தேன். அவர் என்னை ஏமாற்றிவிட்டார். இருந்தாலும், பொருளாதார ரீதியாக சிரமத்தை உணர்ந்தது இல்லை. நடுத்தர வர்க்க வாழ்க்கையை வாழ்ந்து பழகியதால் எந்த விதமான வருத்தமோ எனக்கு இல்லை.

3. நடித்த படங்களின் எண்ணிக்கை?

நடித்த படங்களின் எண்ணிக்கை எனக்கே தெரியவில்லை. கணக்கு வைத்துக்கொண்டதே இல்லை. நிறைய ஏமாற்றப்பட்டேன். ஆனால், 2 படங்கள் இயக்கி இருக்கிறேன்.

4. உங்கள் மீது விழுந்த தவறான முத்திரையால் வருத்தமா?

இல்லவே இல்லை. ஒரு நடிகை என்றால் இப்படித்தான் என்ற பார்வை விழும். அதை மாற்றவே முடியாது. அம்மா வேடம், குணச்சித்திர வேடம் என்று எல்லா வித வேடங்களிலும் நடித்துள்ளேன்

5. திருமணம் செய்யாமலேயே இருக்க முடிவெடுத்து விட்டீர்களா?

திருமண வாழ்க்கை என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. ஆனால் எனக்கு அமையவில்லை. திருமண விஷயத்தில் சில நபர்களால் ஏமாற்றப்பட்டேன்.




18+ படங்களில் நடித்தபோது மிரட்டல் வந்தது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு