19,Mar 2026 (Thu)
  
CH
இலங்கை செய்தி

வெளிநாடுகளில் இருந்து மேலும் 77 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்

கொரோனா வைரஸினால் நாட்டிற்கு வரமுடியாமல் சிக்கி தவித்த மேலும் 77 இலங்கையர்கள் இன்று (திங்கட்கிழமை) காலை நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி சவூதி அரேபியாவிலிருந்து 52 பேரும் கட்டாரிலிருந்து 25 பேரும் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன்பின்னர் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.




வெளிநாடுகளில் இருந்து மேலும் 77 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு