15,Jan 2025 (Wed)
  
CH
சினிமா

நடிகை ரகுல் பிரீத் சிங் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளார்.

காதலித்து ஏமாந்த, கணவனால் கைவிடப்பட்ட பெண்களை குறிவைத்த  நபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது!

தமிழில் சூர்யாவுடன் என்.ஜி.கே., கார்த்தி ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் படங்களில் நடித்து பிரபலமானவர் ரகுல் பிரீத் சிங். தடையற தாக்க, என்னமோ ஏதோ, யுவன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது கமல்ஹாசனுடன் இந்தியன் 2, சிவகார்த்திகேயன் ஜோடியாக அயலான் படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.

ரகுல் பிரீத் சிங்குக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார்.

ரகுல் பிரீத் சிங் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் என்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். தற்போது நன்றாக உணர்கிறேன். ஓய்வுக்கு பிறகு விரைவில் படப்பிடிப்புக்கும் திரும்புவேன். என்னை சந்தித்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள் நன்றி” என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே அமிதாப்பச்சன், விஷால், பிருத்விராஜ், சிரஞ்சீவி, ராஜசேகர், நடிகைகள் ஐஸ்வர்யாராய், தமன்னா, நிக்கி கல்ராணி உள்ளிட்ட பலர் கொரோனா தொற்றில் சிக்கி மீண்டனர்.

நடிகை ரகுல் பிரீத் சிங் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளார்.

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment

<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு