சிறுவர் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட அவரை, 200000 ரூபா பெறுமதியான இரண்டு ஆட் பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டது.
2021 ஜனவரி 04 அன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிதாக பிறந்த கிட்டத்தட்ட 30 குழந்தைகளை அவர் இதுவரை விற்றுவிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததை அடுத்து மாத்தளையை சேர்ந்த 47 வயது நபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
அவரது குழந்தை கடத்தல் நடவடிக்கை தொடர்பான சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோவின் அடிப்படையில் காவல்துறை பெண்கள் மற்றும் குழந்தைகள் பணியகம் ஆரம்பித்த விசாரணையைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
காதலித்து ஏமாற்றப்பட்டு, கணவனால் கைவிடப்பட்ட கர்ப்பிணி பெண்களை அடையாளம் கண்டு, அவர்களின் குழந்தைகளை விற்பனை செய்யும் ஒப்பந்தத்தை மேற்கொண்டு வந்தார். சமூக ஊடகங்கள் மூலம் பெண்களை அடையாளம் காணும் பிரச்சார பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குழந்தையை விற்பனை செய்ய விரும்பும் பெண்கள் அவருக்கு மொரட்டுவ பகுதியில் சொந்தமாக இருந்த இரண்டு வீடுகளில் தங்கியிருந்தனர்.
விசாரணையில் 12 கர்ப்பிணிப் பெண்கள் அவருக்கு சொந்தமான வீடுகளில் தங்கியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 12 பெண்கள் இனம் காணப்பட்டனர். அவர்களில் ஐந்து பேர் ஏற்கனவே தங்கள் குழந்தைகளை மூன்றாம் தரப்பினரிடம் பணத்திற்காக விற்பனை செய்திருந்தனர். மூன்று பேர் தங்கள் குழந்தைகளுடன் கண்டுபிடிக்கப்பட்டனர்.
0 Comments
No Comments Here ..