20,May 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

கிளிநொச்சியில் மணல் கடத்தல்காரர்கள் உருவாக்கிய குளங்கள்!

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக இடம்பெற்ற சட்டவிரோத மணல் அகழ்வு காரணமாக ஏற்பட்ட பாரிய பள்ளங்களில் தற்போது மழை நீர் தேங்கி நிற்பதனால் அவை ஆபத்தான பிரதேசங்களாக மாறியுள்ளன என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

சாதாரன நிலப்பரப்புகளாக காணப்பட்ட பிரதேசங்களில் கடந்த காலங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு கண்மூடித்தனமாக இடம்பெற்று வந்துள்ளது. இதனை

கண்டித்து அவ்வவ்போது மாவட்டத்தில் போராட்டங்களும் இடம்பெற்றன. இருந்தும் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த முடியவில்லை, சட்டத்தை

பாதுகாக்கின்றவர்களின் ஒத்துழைப்புடனும், அதிகார மற்றும் அரசியல் தரப்பின் ஆதரவுடனும் சட்டவிரோத மணல் அகழ்வு இன்றும் இடம்பெற்று வருகிறது.

இவ்வாறான சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்படுகின்றவர்கள் எவ்வித சுற்றுச்சூழல் அக்கறயும் அற்றவர்களாக கண்மூடித்தனமாக மணல் அகழ்வில் ஈடுபட்டனர்.

இதன் விளைவாக பொது மக்களின் காணிகள் உட்பட இரணைமடு குளத்தின் கீழ் பகுதி, ஆற்றுப் பகுதிகளில் பாரிய குழிகள் ஏற்பட்டன.

இவ்வாறு ஏற்பட்ட குழிகளில் தற்போது மழை நீர் தேங்கி அவை சிறிய நீர் நிலைகள்போன்று காட்சி அளிக்கிறது. எனவே இந்தப் பிரதேசங்கள் தற்போது ஆபத்தான பகுதிகளாக மாறியுள்ளன. பல அடிகள் ஆழம் கொண்ட பள்ளங்களாக நீர் நிரம்பி காணப்படுவது கால்நடைகள், மற்றும் மனிதர்களுக்கு உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் பொது மக்கள் சாதாரணமாக பழைய நினைவுகளில் இப் பகுதிகள் ஊடாக செல்கின்ற போது அவை உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் பிரதேச பொது மக்களால் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.





கிளிநொச்சியில் மணல் கடத்தல்காரர்கள் உருவாக்கிய குளங்கள்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு