12,May 2024 (Sun)
  
CH
இந்திய செய்தி

இந்தியாவில் சில முக்கிய நகரங்களில் வீடு விற்பனையில் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் உள்ள 7 முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை நடப்பாண்டில் 47 சதவீதம் சரிவைச் சந்திக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சொத்து ஆலோசனை நிறுவனமான அனராக் தெரிவித்துள்ளதாவது: கரோனா பெருந்தொற்று பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தி வீடுகளுக்கான தேவையை பெருமளவில் குறைத்துள்ளது. நடப்பாண்டு முடிவடைய இன்னும் ஒன்பது நாள்களே உள்ளன.

இந்நிலையில் 7 முக்கிய நகரங்களில் வீடுகளின் விற்பனை 2020 இல் 47 சதவீதம் சரிவடைந்து 1.38 லட்சமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2019 இல் 7 நகரங்களில் வீடுகள் விற்பனை 2.61 லட்சமாக அதிகரித்து காணப்பட்டது. கடந்தாண்டைக் காட்டிலும் நடப்பாண்டில் புதிய வீடுகளின் அளிப்பும் 2.37 லட்சத்திலிருந்து 1.28 லட்சமாக குறைந்துள்ளது.

சலுகை மற்றும் தள்ளுபடி அறிவிப்புகளைத் தொடர்ந்து அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் குடியிருப்புகளுக்கான ரியல் எஸ்டேட் தொழில் சூடுபிடித்துள்ளது. மேலும், வீட்டு கடன் வட்டி குறைப்பு, குறித்த காலத்துக்கு முத்திரைத்தாள் கட்டணங்களை குறைத்தது ஆகியவை மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வீடுகள் விற்பனை ஓரளள அதிகரிக்க உதவியுள்ளது.

மும்பை மெட்ரோபாலிட்டன் மண்டலத்தில் நடப்பாண்டில் வீடுகள் விற்பனை 80,870 இலிருந்து 45 சதவீதம் சரிந்து 44,320 ஆக இருக்கும். பெங்களூருவில் வீடுகள் விற்பனை 50,540 என்ற எண்ணிக்கையிலிருந்து 51 சதவீதம் வீழ்ச்சியடைந்து 24,910 ஆக இருக்கும். புணேவைப் பொருத்தவரையில் இந்த சரிள 42 சதவீதம் அளளக்கும், தில்லி என்சிஆர் 51 சதவீத அளளக்கும் இருக்கும்.

சென்னையில் கடந்தாண்டில் 11,820 வீடுகள் விற்பனையான நிலையில் நடப்பாண்டில் இந்த எண்ணிக்கை 6,740 ஆக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோன்று, கொல்கத்தாவிலும் வீடு விற்பனை 13,930 இலிருந்து 49 சதவீதம் சரிந்து 7,150 ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2019 இறுதியில் 6,48,400 வீடுகள் விற்பனையாகமல் தேங்கியிருந்த நிலையில் நடப்பாண்டில் அந்த எண்ணிக்கை 2 சதவீதம் குறைந்து 6,38,020 ஆக இருக்கும் என அனராக் நிறுவனம் தெரிவித்துள்ளது.




இந்தியாவில் சில முக்கிய நகரங்களில் வீடு விற்பனையில் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு