பிறக்கும் ஒவ்வொரு வருடமும் எல்லோர் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருந்துகொண்டே இருக்கும் அதேபோல் வருகின்ற 2021 ம் ஆண்டு உலகில் என்ன நடக்கப்போகின்றன?
உலகில் நடக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே கணிப்பதில் பல அபூர்வஜோதிடர்கள் இருந்துள்ளனர்
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்டர்டாம்ஸ் உலகில் கி.பி.3797 வரை என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதைக் கூறியுள்ள அபூர்வ ஜோதிடர். சுமார் 3000 பலன்களை இவர் கூறியுள்ளதும் அவை அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நடந்து வருவதும் உலகில் உள்ள அனைவரையும் திகைக்க வைக்கிறது. 14-12-1503ல் பிறந்த இவர் 2-7-1566ல் மறைந்தார். இவரது வாழ்வு மிக விசித்திரமான ஒன்று. இவர் கூறிய பலன்கள் பெரும்பாலும் அழிவையும், விபத்துக்களையும், கொலைகளையும் சுட்டிக் காட்டியதாகவே இருந்தது
அதுபோல் தான் இந்த பெண் ஜோதிடர் பாபா வங்கா. இவரது கணிப்புகளில் அதிகம் பலித்து உள்ளன.
2016 ஆண்டு மிகப்பெரிய இஸ்லாமிய போர் தொடங்கும், ஐரோப்பியர்களுக்கு எதிராக ரசாயன ஆயுதத்தை பயன்படுத்துவர். அவர்கள் 2043 ஆம் ஆண்டு ரோமை மைய புள்ளியாக கொண்டு தங்கள் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவார்கள் என கூறினார்.
அமெரிக்காவில் உள்ள வர்த்தக கோபுரங்கள் மீது விமான தாக்குதல் நடைபெறும் எனக் கூறினார். அதேபோன்று அந்த தாக்குதல் நிகழ்ந்து உலகையே அதிர வைத்தது. அமெரிக்காவின் 44-வது ஜனாதிபதியாக ஒரு கருப்பினத்தவர் பதவி ஏற்பார் என்று கணித்தார். அதே போல், ஒபாமா ஜனாதிபதியாக பதவியேற்றார். பின்னர், 2016-ஆம் ஆண்டு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் வலுமை பெறும் எனவும், ஐரோப்பாவில் இருந்து பிரித்தானியா விலகும் எனவும் கணித்தார். இதைத் தொடர்ந்து தன்னுடைய குடிமக்கள் மீது சிரியா ஜனாதிபதி ரசாயன தாக்குதலை நடத்துவார் என கணித்தார், அதுவும் நடந்தது.
இப்படி இவர் கூறும் விஷயங்களில் பல நடந்துள்ளதால், இவருடைய கணிப்பை பற்றி பலரும் எதிர்பார்க்கின்றனர். 2019 ஆம் ஆண்டிற்கான அவரது கணிப்புகள் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. இருந்தாலும் பாபாவை பின்பற்றுவோர் அவரது கணிப்பை நம்புகின்றனர்.
எனவே பாபா 2021 ல் என்ன சொல்லியிருக்கின்றார் அறிந்து கொள்வோம்
2021 ஆம் ஆண்டில், ஐரோப்பாவின் பொருளாதார வீழ்ச்சியடையும். ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிரான ஒரு கொலை முயற்சியையும், அவருக்கு ஒரு மிகப் பெரும் அச்சுறுத்தல், அவரது நாட்டில் இருந்தே வரக் கூடும்.
மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு மர்மமான நோயால் நோய்வாய்ப்படுவார், அது அவரை காது கேளாதது, மூளை பிரச்சனை சம்பந்தமான நோயாக இருக்கும்.
இந்த பிரபஞ்சத்தில் வாழ்க்கை கண்டுபிடிக்கப்படும். அதாவது, திடீரென்று பூமியில் உயிர் எவ்வாறு தோன்றியது என்பது தெளிவாகத் தெரியும்.
அடுத்த 200 ஆண்டுகளில், பிற உலகங்களிலிருந்து மக்கள் தங்கள் ஆன்மீக உடன் பிறப்புகளுடன் தொடர்பு கொள்வார்கள். சோவியத் யூனியன் 21-ஆம் நூற்றாண்டின் முதல் காலாண்டில் மீண்டும் கட்டப்படும்.
ரயில்கள் சூரிய ஒளியைப் பயன்படுத்தி பறக்கும். பெட்ரோல் உற்பத்தி நின்றுவிடும். சூரிய ஆற்றல் பற்றி அதிக விவாதங்கள் எழும்.
ஒரு வலிமையான டிராகன் மனிதகுலத்தை கைப்பற்றும். மூன்று இராட்சதர்கள் ஒன்று கூடுவார்கள், அதில் சிலரிடம் சிவப்பு பணம் இருக்கும் என்று கணித்துள்ளார். டிராகன் என குறிப்பிடுவதை சீனா என்று சிலர் கருதுகின்றனர். மூன்று இராட்சதர்கள் என்பதை ரஷ்யா, இந்தியா, சீனா ஆகியவையாக இருக்கலாம். பணம் சிவப்பாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளதால், அது சீனவின் யுவான் நோட்டுகள் சிவப்பு நிறத்தை கொண்டிருக்கும், எனவே இது நிச்சயமாக சீனா தான் என்று சிலர் கருதுகின்றனர்.
மனிதர்கள் புற்றுநோயில் இருந்து விடுபடுவர், அதாவது புற்றுநோய் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்படும் நாள் வரும் என கணித்துள்ளார்.
மேலும் அவருடைய கணிப்புகள்;-
* 2025: உலகளாவிய பசி 2025-2028-க்குள் ஒழிக்கப்படும்.
* 2028: மனிதன் சுக்கிரன் கிரகத்திற்கு பறப்பான். அங்கு புதிய எரிசக்தி ஆதாரங்களை கண்டறிவார்கள்.
* 2033: உலகில் துருவ பனிப் படலங்கள் உருகி நீரின் அளவு அதிகரிக்கும்.
* 2043: ஐரோப்பா முழுவதும் இஸ்லாமிய அரசாக மாறும். ரோம் அவர்களின் தலைநகராகும்.
* 2072 மற்றும் 2086-க்கு இடையில் ஒரு வர்க்கமற்ற கம்யூனிச சமுதாயம் புதிய தன்மையை உருவாக்கும்.
* 2170 முதல் 2256 ஆம் ஆண்டுக்கு இடையில் பூமியில் இருந்து சுதந்திரமாக பிரிந்து அணுசக்தியால் செவ்வாய் கிரகத்தில் காலனி அமைக்கப்படும், உலகில் கடலுக்கு அடியில் நகரங்கள் உருவாகும். வேற்று கிரகவாசிகளின் கண்டுபிடிப்புகள், அதிபயங்கரமான கண்டுபிடிப்புகள் நடக்கும்.
* 2262 ஆம் ஆண்டு மற்றும் 2304 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நமது கால பயணத்தில் விரிசல் ஏற்படும். பிரஞ்சு கொரில்லாக்கள் பிரான்சில் முஸ்லிம் அதிகாரிகளுடன் போரிடுவார்கள்.
* 2341ல் இயற்கை மற்றும் மனிதனால் தொடர் பேரழிவுகள் ஏற்படும். பின்னர் நமது பூமி வசிக்க தகுதி அற்றதாக மாறி விடும். மனிதர்கள் நமது சூரிய குடும்பத்தின் மற்ற கிரகங்களை தேடி ஓடுவர்.
* 4302 முதல் 4674 தீய கோட்பாடுகள் நடக்கும். மனிதர்களுக்கு இறப்பே கிடையாது. வேற்றுகிரகவாசிகள் உள்வாங்கப்படுவர். 34 ஆயிரம் கோடி மக்கள் கடவுளிடம் பேச சிதறி ஓடுவார்கள்.
* 5070 ஆம் ஆண்டு பிரபஞ்சம் முடிவடையும் எனவே இவ்வாறு சில கணிப்புக்களை கணித்துள்ளார்
0 Comments
No Comments Here ..