அழிவடையாத 6 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தொிவித்துள்ளார்.
சஷே பைக்கற்றுக்கள், கிருமி நாசினி போத்தல்கள், கொட்டன் பட்ஸ், விளையாட்டுப் பொருட்கள் உட்பட 6 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் தொிவித்துள்ளார்.
மேற்படி தடையுத்தரவு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அனுமதியைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு தற்போது சட்ட மா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் வரும் வாரங்களுக்குள் குறித்த நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதாகவும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அமைச்சர் தொிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..