நாட்டில் மேலும் நான்கு கொவிட்19 மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளன.
இதற்கமைய, நாட்டில் கொவிட் 19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 191 ஆக உயர்வடைந்துள்ளது.
வவுனியாவைச் சேர்ந்த 52 வயதான பெண் ஒருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலிருந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 26ஆம் திகதி உயிரிழந்தார்.
கொவிட்19 நிமோனியா நிலையுடன் எற்பட்ட மாரடைப்பே அவரது மரணத்திற்கான காரணம் என தெரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கோட்டை பகுதியை சேர்ந்த 66 வயதுடைய ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்டதன் பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 26 ஆம் திகதி உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்19 நிமோனியா நோய் நிலையாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ராகமை பகுதியை சேர்ந்த 75 வயதான பெண் ஒருவர் ராகமை போதனா வைத்தியசாலையிலிருந்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 26ஆம் திகதி உயிரிழந்தார்.
கொவிட் 19 நிமோனியா மற்றும் மூளையில் ஏற்பட்ட தொற்று நிலைமை என்பன அவரது மரணத்திற்கான காரணமாகும்.
இதேவேளை , கடவத்தை பகுதியை சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவர் ராகமை போதனா வைத்தியசாலையிலிருந்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவர், அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 25ஆம் திகதி உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் கொவிட் 19 நிமோனியா நோய் நிலை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..