15,Jan 2025 (Wed)
  
CH
இலங்கை செய்தி

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கான திட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கான இரண்டு பொறிமுறைகளை பெருந்தோட்ட நிறுவனங்கள் முன்வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

இதன்படி முதலாவதாக தற்போது இருக்கின்ற 700 ரூபா என்ற அடிப்படை வேதனத்துடன் ஊழியர்சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றை சேர்த்து 105 ரூபாவும், வினைத்திறன் கொடுப்பனவாக 75 ரூபாவாகவும் வரவுக்கான கொடுப்பனவாக 70 ரூபாவும் மற்றும் மேலதிக கொழுந்து பறிப்புக்கான கொடுப்பனவாக 75 ரூபா வீதமும் வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

அதேபோன்று இரண்டாவது முறையாக கலப்புப் பொறிமுறை ஒன்று பெருந்தோட்ட நிறுவனங்களால் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன்படி மூன்று தினங்களுக்கு அடிப்படை வேதன முறையின் கீழும் மூன்று தினங்களுக்கு வினைத்திறன் அடிப்படையான கொடுப்பனவின் கீழும் வேதனத்தை வழங்குவது குறித்த யோசனைமுன்வைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த யோசனைகள் சம்பந்தமாக இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை

எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என இந்தபேச்சுவார்த்தையில் கலந்து கொள்கின்ற தரப்பினர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தனர்.

அதேநேரம் எதிர்வரும் 31ஆம் திகதி இது தொடர்பான காணொளி ஊடான பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது




பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கான திட்டம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு