25 ஆயிரம் பெண் தொழில் முனைவோர்களை கொண்ட கிராமப்புற வர்த்தக வலையமைப்பு ஒன்றினை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சமூர்த்தி வதிவிட பொருளாதார நுண் நிதிய, சுயதொழில், தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
இந்த வலையமைப்பின் ஊடாக கொவிட்19 தொற்றை எதிர்கொண்டு விநியோகத்தை வலுவானதாக செயற்படுத்த முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நுகர்வோர் நலனை சிந்திக்காது செயற்படும் வர்த்தகர்கள் உள்ளனர்.
அதனை போன்று விவசாயிகள் மற்றும் விநியோத்தர்கள் நலனை கருத்திற்கொள்ளாது செயற்படும் மற்றொரு தரப்பும் உள்ளது.
எனவே நுகர்வோருக்கு சிரமத்தை ஏற்படுத்தாத மற்றும் அரசாங்கத்தின் தீர்மானங்களை செயற்படுத்தும் வலையமைப்பை உருவாக்குவதே இதன் நோக்கம் எனவும் அமைச்சர் செஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..