உடல்ரீதியான காரணங்களை முன்வைத்து, அரசியலுக்கு வர முடியாததிற்கான காரணத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளார் ரஜினிகாந்த்.
டிசம்பர் 31-ம் தேதி கட்சித் தொடங்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ளதாக ரஜினி அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் 'அண்ணாத்த' படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது வழக்கமான பரிசோதனையில் படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ரஜினிக்கு கொரோனா நெகடிவ் என்றாலும், ஹைதராபாத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார். அப்போது அவருக்கு திடீரென்று ரத்த அழுத்த மாறுதல் ஏற்பட்டதால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ரஜினிக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது. அதில் பயப்படும்படி எதுவும் இல்லை என்பதால், சென்னை திரும்பினார். ஆனாலு, மருத்துவர்கள் ரஜினிக்கு சில விஷயங்களை அறிவுறுத்தினார்கள்.
இதனால், ரஜினி அரசியலுக்கு வருவாரா உள்ளிட்ட சந்தேகம் வலுத்தது. தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
0 Comments
No Comments Here ..