13,May 2024 (Mon)
  
CH
இந்திய செய்தி

தேர்தலில் திமுக 200 இடங்களில் வெற்றி பெறும்!

ராணிப்பேட்டை மாவட்டம் அனந்தலை கிராமத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அதிமுகவை நிராகரிக்கவும் என்ற தலைப்பில் மக்கள் சபைக் கூட்டம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் ஸ்டாலின் பரப்புரை செய்தார்.

மங்கள் கிராமசபை கூட்டத்தில் பெண்களின் கட்டுப்பாடு திமுகவின் வெற்றிக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது கட்டாயம் திமுக வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று பெண்கள் நம்பிக்கையோடு இருப்பதாக கிராம சபை கூட்டம் என்பதை அரசு ஆண்டுக்கு மூன்று முறை நடத்த வேண்டும். ஆனால் கடந்த 10 வருடத்தில் அதிமுக அரசு கிராம சபை கூட்டத்தை நடத்தாதன் காரணமாகத்தான் திமுக கிராம சபை கூட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்து வருகிறது.

இதைத் தடுக்கும் நோக்கத்தோடு அதிமுக அரசு கிராம சபைக் கூட்டம் நடத்தினால் வழக்குப்பதிவு செய்து அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறது எனவே பெயர் மாற்றம் செய்யப்பட்டு மக்கள் கிராம சபைக் கூட்டம் என்ற தலைப்பில் இந்த கூட்டத்தை நடத்தி வருகிறோம்.

விளம்பரத்தில் தமிழ்நாடு எல்லா துறையிலும் முதலிடத்தில் உள்ளது என்று போட்டுள்ளனர். ஆனால் தற்போது ஊழலிலும், கொலை நகை பணம் கொள்ளை அடிப்பதும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவை கட்டிடம் அதிமுகவினர் ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். எப்போது ஆட்சி கவிழும் என்ற நிலையில்தான் ஆண்டு வந்தனர்.

திமுக ஓட்டுப் போடாவிட்டாலும் ஜெயலலிதா தான் முதலமைச்சர் அவருடைய சாவில் இன்னும் மர்மம் நீடிக்கிறது. இறப்பு குறித்த மருத்துவ விளக்கமும் அதிமுகவினரால் பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை.

முதலமைச்சர் பதவி பறிபோனதன் காரணமாகத்தான் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து சாவில் மர்மம் இருப்பதாகப் போராட்டம் நடத்துவது போல் நாடகமாடி துணை முதல்வர் பதவியைப் பெற்றார்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சாவில் ஒளிந்திருக்கும் மர்மத்தைக் கண்டுபிடித்து வெளியே கொண்டு வருவது தான் முதல் வேலையாக இருக்கும்.

தில்லியில் கடுமையான குளிரிலும் விவசாயிகள் கடந்த ஒரு மாத காலமாகப் போராடி வருகின்றனர். அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளும் நெசவாளிகள் ஆதரவு தெரிவித்துப் போராடி வருகின்றனர். தமிழகத்தில் எல்லா தரப்பு மக்களும் தங்களுடைய பிரச்னை குறித்துப் போராடி வருகின்றனர்.

பெங்களுக்கு அரசு 2500 வழங்குவதாக அறிவித்து இருக்கிறார்கள். ஆனால் திமுக 5000 ஆக உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது தேர்தல் நேரத்தில் அதிமுகவினர் கட்சிப் பணத்தை எடுத்து மக்களுக்கு வழங்குவதைப் போல் அரசின் பணத்தைக் கொடுத்து மக்களிடத்தில் நன்மதிப்பைப் பெற்று விடலாம். வாக்குகளையும் பெற்று விடலாம் என்று நினைக்கின்றனர் அது நடக்கப் போவதில்லை.

அரசின் பணத்தை அதிமுகவினர் மக்களுக்கு வழங்குவதில் திமுகவிற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை அதை முறையாக ஒழுங்காக நியாயமாக மக்களுக்கு வழங்க வேண்டும் என்பது தான் திமுகவின் கோரிக்கை ஆனால் முதல்வர் திமுக இந்த திட்டத்தைத் தடுக்க முயற்சி செய்வதாகப் பொய்க் குற்றச்சாட்டுகளை மக்களிடையே பரப்பி வருகின்றார்.

நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி 39 இடங்களில் வெற்றி பெற்றோமோ அதேபோல சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று ஸ்டாலின் என்றார்.




தேர்தலில் திமுக 200 இடங்களில் வெற்றி பெறும்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு