2020 ஆம் ஆண்டில் ஒவ்வொரு நிமிடமும் 22 பிரியாணிகள் டெலிவரி செய்யப்பட்டதாக பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ தெரிவித்துள்ளது.
சிக்கன், மட்டன் பிரியாணிகள் மட்டுமின்றி, வெஜ் பிரியாணிக்கும் கிட்டத்தட்ட 19.8 லட்சம் ஆர்டர்கள் பெறப்பட்டதாகத் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் 4.5 லட்சமாக இருந்த பீட்சா ஆர்டர், நவம்பர் மாதத்தில் 7 லட்சத்திற்கும் அதிகமான உயர்ந்துள்ளது.
தில்லி, மும்பை, பெங்களூரு மற்றும் புணே ஆகிய நகரங்களில் மோமோஸ் உணவு வகை மட்டும் 25 லட்சம் ஆர்டர்கள் கிடைத்தன. ஒரு பெங்களூரு குடியிருப்பாளர் ஒரு நாளைக்கு நான்கு ஆர்டர்கள் வீதம் இந்த ஆண்டு 1,380 ஆர்டர்களை கொடுத்துள்ளார். இதன் மொத்த மதிப்பு ரூ. 1,99,950. அதேநேரத்தில் மிகக்குறைந்த ஆர்டர் ரூ. 10.
நாட்டின் மிக விருப்பமான இனிப்பாக குலாப் ஜாமுன் உள்ளது. தீபாவளி நேரத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஆர்டர்கள் வந்துள்ளன. இதில் மும்பை முதலிடம்.
ஒட்டுமொத்த ஆர்டர்களில் டார்ஜிலிங் மற்ற நகரங்களை தோற்கடித்து முதலிடத்தில் உள்ளது. இங்கு சராசரி ஆர்டர் மதிப்பு ரூ.500 ஆகும்.
மேலும் டெலிவரி செய்யும் நபர்களுக்கு டிப்ஸ் வழங்குவதில் தாராளமிக்கவர்கள் மும்பையில் அதிகம் உள்ளனர். மும்பை நகரத்தில் மட்டும் டிப்ஸ் தொகை ரூ. 4.6 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..