உலகம் முழுவதும் புத்தாண்டை வரவேற்க மக்கள் காத்திருக்கும் நிலையில், நியூஸிலாந்தில் புத்தாண்டு பிறந்தது.
இரவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சாலைகளில் மக்கள் கூடியிருந்து முழக்கங்களை எழுப்பி உற்சாகத்துடன் 2021-ஆம் ஆண்டை வரவேற்றனர்.
நியூசிலாந்தின் ஆக்லாந்து பகுதியிலுள்ள மக்கள் வான வேடிக்கைகளுடன் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்று கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து இன்னும் சில மணி நேரங்களில் இந்தியாவிலும் புத்தாண்டு பிறக்கவுள்ளது.
உலகிலேயே நேரத்தில் மிகவும் முந்தியிருப்பது நியூஸிலாந்து. எனவே, ஒவ்வொரு புத்தாண்டையும் முதன் முதலாக வரவேற்கும் நாடாகவும் இருக்கிறது.
இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நியூஸிலாந்தில் இரவு 12 மணி. எனவே, நியூஸிலாந்தில் புத்தாண்டு பிறந்துவிட்டது. புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, ஆக்லாந்து முழுவதும் வானவேடிக்கைகளால் களைகட்டியது.
தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகளும் நடைபெற்றன. ஆக்லாந்து, கிறிஸ்ட்சர்ச் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ன.
0 Comments
No Comments Here ..