29,Apr 2024 (Mon)
  
CH
இந்திய செய்தி

இந்தியாவில் தடுப்பூசி ஒத்திகை ஆரம்பம்

தமிழகம் உள்ளடங்கலாக இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று(சனிக்கிழமை) நடைபெறுகின்றது.

முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் சுமார் 30 கோடி பேருக்கு முதற்கட்ட தடுப்பூசி போட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக பஞ்சாப், அசாம், ஆந்திரா மற்றும் குஜராத்தில் இரண்டு நாட்கள் ஒத்திகை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று நடைபெறுகின்றது.

இதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், கோவை, நீலகிரி, நெல்லை என 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகின்றது.

இந்நிலையில், சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தடுப்பூசி ஒத்திகைக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாகக் கூறினார்.

தமிழகத்தில் சுமார் இரண்டரை கோடி தடுப்பூசிகளை சேமிக்கும் அளவுக்கு நிலைமை இருப்பதாகவும், மருத்துவப் பணியாளர்களும், முதியவர்களும் அதிக அளவில் இருப்பதால், தமிழகத்திற்கு அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார்.





இந்தியாவில் தடுப்பூசி ஒத்திகை ஆரம்பம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு