சமீபத்திய பேச்சுவார்த்தைகளை மறுத்துவரும் சீனா, தரமற்ற தந்திரம் மற்றும் ஆத்திரமூட்டலில் ஈடுபட்டு மோதலை எதிர்பார்க்கின்றது என ஜனாதிபதி சாய் இங்-வென் தெரிவித்துள்ளார்.
தனது புத்தாண்டு உரையில், ‘பெய்ஜிங் மோதலை ஒதுக்கி வைக்க தயாராக இருந்தால், சீனாவுடன் சமத்துவம் மற்றும் கண்ணியத்தின் கொள்கைகளின் கீழ் அர்த்தமுள்ள உரையாடலை நடத்த தைவான் தயாராக உள்ளது’ என கூறினார்.
தாய்லாந்தை தனது பிராந்தியம் என சொந்த கொண்டாட முனையும் சீனா, தென்கிழக்கு கடற்கரையில் படை பலத்தை அதிகரித்து வருவதாக, சீன இராணுவ நடவடிக்கைகளை கண்காணித்து வருவோர் தெரிவிக்கின்றனர்.
2016ஆம் ஆண்டு ட்சாய் ல்ங் ஜனாதிபதியாக பதவியேற்றதற்கு பின்னர், சீனாவின் அழுத்தம் அதிகரித்துள்ளது.
அத்துடன் தாய்வான் ஜலசந்தியில் சீனாவின் போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகின்றன.
எந்த நேரத்திலும் சீனா தாய்வான் மீது தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிற நிலையில், தாய்வான் முன்னதாக 1.8 பில்லியன் டொலர்களுக்கு அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
0 Comments
No Comments Here ..