30,Apr 2024 (Tue)
  
CH
உலக செய்தி

தடுப்பூசி ஏற்றப்பட்ட மருத்துவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது

மெக்ஸிகோவில் ஃபைஸா் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவருக்கு திடீா் உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நியூவோ லியான் மாகாணத்தில் ஃபைஸா்-பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்ட 32 வயது பெண் மருத்துவருக்கு திடீரென வலிப்பும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டது.

அதையடுத்து, அவா் மருத்துவனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு என்செஃபலோமையலிடிஸ் எனப்படும் மூளை தண்டுவட அழற்சி ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

ஏற்கனவே, அந்த மருத்துவருக்கு ஒவ்வாமை குறைபாடு இருந்துள்ளது.

ஃபைஸா் தடுப்பூசியை தன்னாா்வலா்களுக்குச் செலுத்தி சோதித்தபோது, யாருக்கும் என்செஃபலோமையலிடிஸ் பாதிப்பு ஏற்பட்டதற்கான சான்றுகள் இல்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த விவகாரம் குறித்து ஃபைஸா் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, மெக்ஸிகோவில் 1,443,544 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 126,851 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.





தடுப்பூசி ஏற்றப்பட்ட மருத்துவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு