30,Apr 2024 (Tue)
  
CH
உலக செய்தி

தினசரி கொரோனா தொற்று மீண்டும் புதிய உச்சம்

அமெரிக்காவில் தினசரி கொரோனா தொற்று மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கொரோனாவால் உலகிலேயே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடான அமெரிக்காவில், கடந்த சனிக்கிழமை மட்டும் 2.77 இலட்சத்துக்கு மேலானவா்களுக்கு அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த எண்ணிக்கை, இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கையாகும்.

ஏற்கெனவே, கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப் பிறகு நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடையும் என்று கொரோனா தடுப்புக் குழு தலைவா் அந்தோணி ஃபாசி எச்சரித்திருந்தாா். இந்த நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வரும் அமெரிக்க அரசு, பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

2020 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுதும் 2 கோடி பேருக்கு அந்தத் தடுப்பூசி போடப்படும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தாலும், இதுவரை 42 லட்சம் பேருக்கு மட்டுமே அந்தத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, அமெரிக்காவில் 20,906,094 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 358,704 போ் அந்த நோய் பாதிப்புக்கு பலியாகியுள்ளனா்; 12,362,944 போ் முழுமையாக குணமடைந்துள்ளனா்; 8,184,446 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 29,257 பேரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது




தினசரி கொரோனா தொற்று மீண்டும் புதிய உச்சம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு