15,Jan 2025 (Wed)
  
CH
இலங்கை செய்தி

அப்துல்லா மஹ்ரூப் பிணையில் விடுதலை

முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் பொது முகாமையாளர் மொஹமட் அஸ்லம் ஆகிய இருவருக்கும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

குறித்த இருவரும் 5 இலட்சம் ரூபா சரீர பிணையின் அடிப்படையில் பிணை விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இருவரினதும் கடவுச் சீட்டு தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் லங்கா சதொஷவிற்கு சொந்தமான வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த வழக்கு மார்ச் மாதம் 24 ஆம் திகதி மேலதிக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.




அப்துல்லா மஹ்ரூப் பிணையில் விடுதலை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு