தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் உலகம் முழுவதும் 13 ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும் விஜய்யின் கோரிக்கையை ஏற்று திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு உத்தரவு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இது விதிமீறல் ஆன செயல் எனவும் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும் தான் அனுமதி பிறப்பிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழக அரசு 100 சதவீதம் இருக்கை உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதனால் அடுத்த கட்ட நடவடிக்கையாக தமிழக அரசு என்ன செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒருவேளை 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி என மறுஉத்தரவு வெளியானால் பொங்கலுக்கு வெளியாக இருந்த மாஸ்டர் திரைப்படம் வெளியாகாது என தகவல் வந்துள்ளது. இது தளபதி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் விஜய்க்கு திரை உலகத்தில் இருந்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் ''கொரோனா காலத்தில் உயிருக்குப் போராடிய சொந்தங்களைக்கூடப் பார்க்க முடியாத ரசிகர்கள், தன் உயிரை பணயம் வைத்து தியேட்டருக்குப் போகப் போகிறார்கள். அவர்களின் பெற்றோர்கள் மட்டும் பாவமல்ல, அவர்களோடு சேர்ந்து வாழ்கிற நாமும்தான். ஆனால் ஒரே ஆறுதல், நாம செத்தாலும் அந்த 'நடிகர்'கள் நலமுடனும் வளமுடனும் இருப்பார்கள். அந்த மகிழ்ச்சி போதும். நாலுபேர் நல்லாயிருக்க நாலாயிரம் பேர் சாகறதுல ஒண்ணும் தப்பில்ல'' என்று எழுத்தாளர் வே.மதிமாறன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் நடிகர் அரவிந்த் சாமி, "சில சமயங்களில் 50% பார்வையாளர்களை அனுமதிப்பதே சிறந்தது. அது போன்ற காலக்கட்டம் தான் இது" என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அரவிந்த் சாமிக்கு எதிராக விஜய், சிம்பு ரசிகர்கள் வசைபாடி வருகிறார்கள்.
0 Comments
No Comments Here ..