16,Jun 2026 (Tue)
  
CH
இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை நிச்சயம்..!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கிடைத்தவுடன் அந்த தாக்குதலுடன் தொடர்புடையோருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படும் என நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஹேசா வித்தானகே முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு நிச்சியமாக தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும்.

எனினும் அதனுடன் தொடர்புபடாதவர்களை தண்டிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே இது குறித்த விரிவான விசாரணைகள் மேற்கொள்ளபட வேண்டும்.குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கவும், நிரபராதிகளை விடுவிக்கவும் எமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.





உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை நிச்சயம்..!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு