24,Nov 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

இலங்கை சென்றுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்குமான சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான அணி இன்று 9 மணி அளவில் இந்திய உயர்ஸ்தானிகரக அலுவலகத்தில் வைத்து சந்தித்துள்ளனர்.

அரசியலமைப்பின் 13 வது திருத்தச்சட்டத்தின் மூலம் அர்த்தமுள்ள அதிகார பகிர்வினை இந்தியா எதிர்பார்த்துள்ளதாக வெளியிட்டுள்ள கருத்துக்கு வரவேற்பை வெளியிட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

இதுதவிர, வடகிழக்கு மாகாண அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக அவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

இதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று முற்பகல் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடியுள்ளது.

இதேவேளை, இந்திய வம்சாவளி உள்ளிட்ட பெருந்தோட்ட பகுதி மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பான விபரக்கோவையை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் கையளித்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்




இலங்கை சென்றுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்குமான சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு