01,May 2024 (Wed)
  
CH
சினிமா

விஜே சித்திராவின் வழக்கில் மேலும் திடுக்கிடும் தகவல்கள்

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக வெளியான அறிக்கையில், சித்ரா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார் என கூறப்பட்ட நிலையில், சித்ரா கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளார் எனவும், இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்கவேண்டும் எனவும் சித்ராவின் பெற்றோர் மற்றும் சித்ராவின் ரசிகர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் சித்ராவின் வீட்டில் மினி பார் இருக்கின்றது என்று ஹேம்நாத்தின் தந்தை பகீர் குற்றச்சாட்டை அளித்ததற்கு, சித்ராவின் குடும்பத்தினர் தனது வீட்டையே வீடியோ மூலமாக  காண்பித்தனர். மேலும் விசாரணையில் கோயம்புத்தூரை சேர்ந்த பிரபல தடயவியல் நிபுணரிடம் சித்ரா கொலை செய்யப்பட்ட போட்டோக்களை காட்டும் பொழுது சித்ராவின் பின்புறம் நின்றுகொண்டு வாயை மூடி கொலை செய்து இருக்கலாம், அதனால்  தான் சித்ராவின்  கன்னத்திலும் தாடையிலும் காயங்கள் இருப்பதாகவும் கழுத்தில் எந்த வித காயங்களும் இல்லை என்பதனால உறுதியாக இது கொலையாக தான் இருக்கும் என்று தடயவியல் நிபுணர் கூறிஉள்ளார்.

மேலும், போஸ்ட்மாட்டம் ஒருநாள் தாமதமாக நடந்தது இந்தக் கொலையை தற்கொலையாக மாற்ற தான் என்று அவர் கூறியுள்ளார். கொலை நடந்த ஹோட்டலில் அடிக்கடி விலை உயர்ந்த கார்கள் வந்து செல்வதாகவும் பல அரசியல் வாதிகளின் கார்கள் வந்து சென்றது ஹோட்டலின் வெளியே உள்ள கேமராவின் மூலம் தெரிய வந்துள்ளது. ஹேம்நாத் பற்றி அவருடைய நண்பர்கள் மற்றும் ஹேம்நாத்க்கு நெருக்கமானவர்களிடம் தொடர்ந்து CBCID விசாரணை நடத்தி வருகின்றனர் அதில் பல திடுக்கிடும் தகவல்கல் வெளியாகி உள்ளன. ஹேம்நாத்க்கு கஞ்சா பயன்படுத்தும் பழக்கம் இருந்ததாகவும் அதை சித்ராவையும் பயன்படுத்த வற்புறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் தான் அவரது hand bag இல் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இவை சித்ரா பயன்படுத்தவில்லை என்றும் ஹேம்நாத் வழக்கை திசை திருப்புவதற்காக சித்ராவின் hand bag இல் கஞ்சாவை வைத்ததாகவும் தெரியவந்துள்ளது, கைரேகை நிபுணர்கள் மூலமாக இதை கண்டறிந்த CBCID இதை உறுதி செய்துள்ளனர்.

மேலும் ஹேம்நாத் விசாரணையின் போது முன்னுக்கு பின் முரணாக பதில் சொல்லியதாகவும் சித்ராவிடம் தனக்கு சொந்தமாக திருமண மண்டபம் உள்ளது என்று கூறியதனால் அந்த திருமண மண்டபத்தை விசாரணை செய்ததில் அது ஹேம்நாத்தின் தந்தை அங்கு வேலை பார்த்து வருவதாகவும், அவர்களுடய சொந்த மண்டபம் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் சென்னையில் உள்ள ராமச்சந்திர மெடிக்கல் காலேஜிக்கு மெடிக்கல் equipment's supply செய்துவருவதாகவும் அவர் கூறியுள்ளார் ஆனால் போலீஸ் நடத்திய விசாரணையில் print செய்வதற்கு பேப்பர்கள் மட்டும் தான் அவர் சப்ளை செய்ததாக தெரிய வந்துள்ளது   





விஜே சித்திராவின் வழக்கில் மேலும் திடுக்கிடும் தகவல்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு