12,Jul 2025 (Sat)
  
CH
இலங்கை செய்தி

கிளிநொச்சி கொரோனா சிகிச்சை மைய மதிய உணவில் புழுக்கள்!

கிளிநொச்சி கிருஷ்ணபுரம் தனிமைப்படுத்தல் மையத்தில் இன்று மதியம் வழங்கபட்ட உணவில் புழுக்கள் காணப்படுள்ளதாக அங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று மதியம் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் காணப்பட்டதாகவும், உணவுகள் பார்சல் மூலம் வழங்கப்படுவதாகவும், அதனை கதிரை ஒன்றில் வைத்துவிட்டு சென்று விட்டார்கள், அதன் போது உணவு உண்ணும்போதே புழுக்கள் காணப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அது தொடர்பாக தனிமைப்படுத்தல் நிலைய பொறுப்பதிகாரிகளிடம் தெரிவிக்க முற்பட்ட போதும் கருத்திலெடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தனர்

இது தொடர்பில் வவுனியா வவுனியா வடக்கு சுகாதார சேவைகள் பணிமனைக்கு தெரியப்படுத்தியுள்ளனர்




கிளிநொச்சி கொரோனா சிகிச்சை மைய மதிய உணவில் புழுக்கள்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு