திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் சசிகலாவை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அதிமுகவிற்கு ஆடிட்டர் குருமூர்த்தி அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு விழாவில் அப்பத்திரிக்கையின் ஆசிரியரான ஆடிட்டர் குருமூர்த்தி பேசியதாவது: அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக நல்ல வளர்ச்சி அடையும்.
முதல்வர் பழனிசாமிக்கு ஆளுமை உள்ளது; அதிமுக இல்லை என்றால் தமிழகத்தில் ஆன்மிகமும், தேசியமும் இருந்திருக்காது.
யார் தேசியத்தை விரும்புகிறார்களோ அவர்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க விரும்பும் சூழல் தற்போது உள்ளது.
திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் சசிகலா போன்றவர்களையும் அதிமுக சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
0 Comments
No Comments Here ..