06,May 2024 (Mon)
  
CH
உலக செய்தி

உலகிலேயே பாதுகாப்பான முக கவசம்?

உலகிலேயே மிகவும் பாதுகாப்பான முக கவசத்தை தயாரித்துள்ளதாக ரேசர் என்ற கேம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த முக கவசம், ஒரு மைக்ரோபோன் வசதியுடன் வருகிறது.

சமீபத்தில் நடந்த ஒரு தொழில்நுட்ப கண்காட்சியில் ஆய்வில் உள்ள இதன் மாதிரியை வெளியிட்ட இந்நிறுவனம், இதில் உள்ள மைக்ரோபோன்கள் உதவியுடன் பயனாளர்கள் பேசுவதால், எதிரில் உள்ளவர்களுக்கு புரிவது சுலபமாக அமையும் என்றனர்.

இது மட்டுமின்றி, இந்த முகக்கவசத்தில் காற்று வெளியேற வசதிகள் உள்ளது. நாம் விடும் சூடான மூச்சுக்காற்றை வெளியேற்றும் அதே நேரத்தில், குளிர்ந்த காற்றை சுவாசிக்க உதவும் வகையில் உள்ளே அனுப்புகிறது.

இது N95 வகை முக கவசம் என்று அந்நிறுவனம் தெரிவித்தாலும், பிபிசி இன்னும் இந்த பொருளை ஆய்வு செய்யவில்லை.

முகம் தெரியும் வகையில், மிகவும் மெல்லிய பிளாஸ்டிக்கை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த முக கவசத்தை பயன்படுத்துவர்களின் உதடுகள் என்ன கூறுகின்றன என்பதை எதிரில் உள்ளவர்கள் பார்க்க முடியும். இதன்மூலம், இந்த முக கவசத்தை அணிந்துள்ளவர்களின் முக பாவனையை நாம் பார்க்க முடியும்.

இத்தகைய வசதியுள்ள முக கவசங்கள், சந்தையில் பல உள்ளன. இருப்பினும், இந்நிறுவனம், இந்த முக கவசத்தில் பொருத்தப்பட்டுள்ள விளக்கு வசதியை குறிப்பிட்டு பேசுகிறது.

அதாவது, உங்களை சுற்றி இருட்டாகும்போது, இதில் உள்ள விளக்குகள் தானாக எரியத்தொடங்குவதோடு, உங்களின் உதடுகள் தெரியும் வகையில் அவை ஒளிரும். இதன் மூலமாக, ‘எத்தகைய வெளிச்சம் இருந்தாலும், பயனாளர்களால் இயல்பாக பேச முடியும்’ என்று கூறுகிறது இந்நிறுவனம்.

இது அணிந்துகொள்ள வசதியாக உள்ளதா? பிபிசி இன்னும் இதை பயன்படுத்திப் பார்க்கவில்லை.

ஆனால், இந்த முக கவசத்தில் பொருத்தப்பட்டுள்ள சிலிக்கான்கள், இதை அணிந்துகொள்வதை மிகவும் வசதியான ஒரு அனுபவமாக மாற்றும் என்கிறது. இதன்மூலம், பயனாளர்கள் தங்களின் முகக்கவசத்தை அடிக்கடி தொடும் அவசியம் இல்லை என்கிறது ரேசர் நிறுவனம்.

மிகவும் திடமாக தயாரிக்கப்பட்டுள்ள இதன் பிடிகள், காதுகளுக்கு வலிக்காதவாறு பார்த்துக்கொள்ளும் என்றும் அந்நிறுவனம் தெரிவிக்கிறது.

இந்த முக கவசத்திற்காகவே தயாரிக்கப்பட்டுள்ள பேசும் வசதியே இதன் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இதிலுள்ள மைக், பயனாளர் பேசுவதை தெளிவாகவும், சத்தமாகவும் வெளிவர உதவும் என்கிறது ரேசர்.

இது வெறும் மாதிரி நிலையிலேயே உள்ளது. இன்னும் விற்பனைக்கு வரவில்லை. இதுகுறித்து பிபிசி ரேசர் நிறுவனத்தை அணுகியது. ஆனால், எந்த பதிலும் கிடைக்கவில்லை.

இருப்பினும், தி வெர்ஜ் டெக்னாலஜி என்ற இணையதளத்திடம் பேசியுள்ள இந்நிறுவனம், முகக்கவசத்தில் உள்ள காற்று வெளியேறும் ஜன்னல்கள் எவ்வளவு நாட்கள் வேலை செய்யும் என்பது சோதனையில் உள்ளது என்றும், எப்படி இருந்தாலும், அதில் உள்ள ஃபில்டர்கள் கண்டிப்பாக அவ்வப்போது மாற்றப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.




உலகிலேயே பாதுகாப்பான முக கவசம்?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு