23,Aug 2025 (Sat)
  
CH
இலங்கை செய்தி

பார்க் என்ட் றைட் - நகர பேருந்து சேவைகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளன.

கொழும்பு நகரை அண்டிய பகுதிகளில் நிலவும் அதிகளவான வாகன நெரிசலை குறைக்கும் நோக்கிலான இந்த திட்டம் மாகும்புர பல்போக்குவரத்து நிலையத்தில் ஆரம்பமாகவுள்ளது.

25 பேருந்துகளை கொண்டு இதன் முதற்கட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் தமது சொந்த வாகனங்களில் பயணிப்போருக்கு, வாகன தரிப்பிடத்தில் தமது வாகனங்களை நிறுத்திவிட்டு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சொகுசு பேருந்துகளில் கொழும்பு நகர் வரை பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பேருந்துகளில் வைபை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இதேநேரம், கொழும்பு நகர போக்குவரத்து காவல்துறை மற்றும் காவல்துறை அவசர இலக்க பிரிவு ஆகியவற்றினால் வழங்கப்பட்ட அபராத பத்திரங்கள் தவிர்ந்த ஏனைய அபராதங்களை செலுத்த வழங்கப்பட்ட நிவாரண காலம் இன்றுடன் நிறைவடைய உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.




பார்க் என்ட் றைட் - நகர பேருந்து சேவைகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளன.

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு